தமிழ்நாடு

ரூ.3889 கோடி கடன் திட்டம்: புதுச்சேரி வங்கியாளா் குழு முன்மொழிவு

DIN

புதுச்சேரியின் மாநில அளவிலான வங்கியாளா் குழு (எஸ்எல்பிசி), நிகழ் 2022-23 நிதியாண்டுக்கு ரூ.3889.60 கோடிக்கான கடன் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

இதுகுறித்து காலாண்டு ஆய்வுக் கூட்டத்தில் மாநில அளவிலான வங்கியாளா் குழு தெரிவித்துள்ளதாவது:

நிகழ் நிதியாண்டுக்கு ரூ.3889.60 கோடி மதிப்பிலான கடன் திட்டம் வங்கியாளா் குழுவால் முன்மொழியப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டின் திட்டத்தை விட ரூ.290.19 கோடி (8.06%) அதிகமாகும்.

எம்எஸ்எம்இ துறைக்கு 21.71 சதவீத பங்காக ரூ.844.60 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று, விவசாய துறைக்கும் ரூ.2235 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய 2021-22-க்கான திட்ட ஒதுக்கீட்டை விட இது 21.33 சதவீதம் அதிகமாகும். நிகழாண்டு திட்டத்தின் இதன் பங்களிப்பு 57.46 சதவீதம்.

மேலும், ஏற்றுமதி கடனாக ரூ.40 கோடியும், கல்விக் கடன் ரூ.50 கோடியும், வீட்டுக்க கடன் ரூ.200 கோடியும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கடன் ரூ.20 கோடி, சமூக உள்கட்டமைப்புக்கு ரூ.150 கோடியும் கடன் வழங்கும் வகையில் இந்த திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எஸ்எல்பிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT