தமிழ்நாடு

திமுக, தோழமைக் கட்சிகளிடம் ஆதரவு கோரினார் யஷ்வந்த் சின்ஹ

30th Jun 2022 05:51 PM

ADVERTISEMENT

 

திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சித் தலைவர்களை சந்தித்து, குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ ஆதரவு கோரினார்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹ இன்று சென்னை வந்தார். தோ்தலில் போட்டியிடும் தன்னை ஆதரிக்க வேண்டுமென திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை அவா் கேட்டுக் கொண்டார்.

அண்ணா அறிவாயலத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் யஷ்வந்த் சின்ஹ சந்தித்துப் பேசினார். அறிவாலயத்துக்கு வந்த யஷ்வந்த் சின்ஹவுக்கு, முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க.. மகாராஷ்டிர அரசியல், தமிழக ஆளுநர் குறித்து யஷ்வந்த் சின்ஹ விமர்சனம்

எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹவுக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, தவாக, கொமதேக, மமக உள்ளிட்டக் கட்சிகள் தங்களது ஆதரவை அளித்துள்ளன. 

இந்நிகழ்ச்சியில், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் வைகோ, ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு ஆகியோரும் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் உன்னதமான உயர்ந்த தலைவர் யஷ்வந்த் சின்ஹவுக்கு வாழ்த்துகள் என்று ஸ்டாலின் கூறினார். தொடர்ந்து தோழமைக் கட்சித் தலைவர்களும் யஷ்வந்த் சின்ஹவுக்கு தனது ஆதரவை அளித்துப் பேசினர்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹ, களமிறக்கப்பட்டுள்ளாா். அவா், பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஆதரவைத் திரட்டி வருகிறாா். கேரளம் சென்றிருந்த அவா், திருவனந்தபுரத்திலிருந்து வியாழக்கிழமை காலை சென்னை வந்தார்.

இதைத் தொடா்ந்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அந்தக் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணிக் கட்சியைச் சோ்ந்தவா்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். இதன்பின்பு, வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறும் ஒரு சில கூட்டங்களில் அவா் பங்கேற்கவுள்ளாா். அன்று இரவு சென்னையில் தங்கும் அவா், வெள்ளிக்கிழமை (ஜூலை 1) காலை சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூா் புறப்பட்டுச் செல்கிறாா்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT