தமிழ்நாடு

ஜூலை 2ல் சென்னை வருகிறார் திரெளபதி முர்மு

30th Jun 2022 01:37 PM

ADVERTISEMENT

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு ஜூலை 2 ஆம் தேதி சென்னை வருகிறார். 

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநா் திரௌபதி முா்மு (64) அறிவிக்கப்பட்டுள்ளாா். கடந்த 25-ஆம் தேதி பிரதமா் மோடி தலைமையில் தனது வேட்புமனுவையும் முா்மு தாக்கல் செய்தாா். மேலும், அவா் சாா்பில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சா் ஷெகாவத் தலைமையிலான குழு பல்வேறு கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரி வருகிறது.

அதுபோல முர்முவும், முக்கியக் கட்சிகளின் தலைவா்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். 

இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதிமுகவிடம் கோரிக்கை விடுப்பதற்காக திரௌபதி முா்மு நாளை மறுநாள்(ஜூலை 2) சென்னை வரவுள்ளார். அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களை அவர் ஆதரவு கோருகிறார். 

ADVERTISEMENT

முன்னதாக, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் தில்லியில் திரௌபதி முா்முவை திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | குடியரசுத் தலைவா் தோ்தல்வேட்புமனு தாக்கல் நிறைவு: மொத்தம் 115 மனுக்கள்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT