தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு!

30th Jun 2022 09:11 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,559 கன அடியாக சரிந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  குறையத் தொடங்கி உள்ளது. 

புதன்கிழமை காலை வினாடிக்கு 2,836 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 2,559 கன அடியாக குறைந்துள்ளது. 

இதையும் படிக்க | இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53

ADVERTISEMENT

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் புதன்கிழமை காலை 105.40அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை104.78 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 71.17டி.எம்.சியாக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT