தமிழ்நாடு

உள்ளாட்சி இடைத்தேர்தல்: அதிமுகவினர் சுயேச்சையாக போட்டி

DIN

தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. 

உள்ளாட்சித் தோ்தலில் விடுபட்ட இடங்களுக்கு இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கான படிவத்தில் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கையெழுத்திடாததால் வேட்பாளா்களுக்கு அதிமுக சின்னம் கிடைக்காத சூழல் உள்ளது.

இந்த நிலையில் ஓ.பன்னீா்செல்வம் புதன்கிழமை அதிமுக வேட்பாளா்களுக்கான படிவங்களில் வியாழக்கிழமை மாலை 3 மணிக்குள் இருவரும் கையெழுத்திட்டு தோ்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாா். ஆனால், அந்தக் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாங்க மறுத்துவிட்டதை அடுத்து பன்னீர்செல்வம் வசமே திருப்பி அளிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளனர். 

அதிமுக வேட்பாளா்களுக்கான படிவம் ஏ மற்றும் பி-இல் அதிமுக தலைமை கையெழுத்திடாத காரணத்தால் இரட்டை இலையில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அடுத்து சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே, இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT