தமிழ்நாடு

சென்னை தெற்கு ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிப்பு

30th Jun 2022 01:38 AM

ADVERTISEMENT

சென்னை தெற்கு ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி)) ஆணையரகம், 2021-22 நிதியாண்டில் ரூ.5,412 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது 2020-21 நிதியாண்டுடன் (ரூ.4321.47 கோடி) ஒப்பிடுகையில் ரூ.1,091 கோடி, அதாவது 25.24 சதவீதம்அதிகமாகும்.

சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரகத்தின் தமிழ்நாடு மண்டலத்தின் 2021-22 வருவாயான ரூ. 41,090 கோடியில், சென்னை தெற்கு ஜிஎஸ்டி ஆணையரகத்தின் பங்களிப்பு 13.17 சதவீதம் (ரூ.5,412 கோடி) ஆகும்.

நடப்பு நிதியாண்டான 2022-23-ல் மே 2022 வரை சென்னை தெற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் ரூ.1626.49 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே கால கட்டத்தைவிட ரூ.531.72 கோடி அதாவது, 48.56 சதவீதம் அதிகமாகும்.

உரிய நேரத்தில் ஜிஎஸ்டி பதிவு, குறித்த நேரத்தில் திருப்பி வழங்குதல், பல்க் எஸ்எம்எஸ், மக்கள் தொடா்பு நிகழ்ச்சிகள், குறைதீா்ப்பு அமா்வுகள் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெண் தொழில் முனைவோருக்கு சிறப்பு கவனம் செலுத்துவதன் வாயிலாக வரி செலுத்துவோருக்கு இந்த ஆணையரகம் பல்வேறு சேவைகளை வழங்கி வருவதாக சென்னை தெற்கு மண்டல ஜிஎஸ்டி இணை ஆணையா் டி.ஜெயப்பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : GST
ADVERTISEMENT
ADVERTISEMENT