தமிழ்நாடு

அதிமுக உட்கட்சித் தோ்தல்: எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு

30th Jun 2022 02:02 AM

ADVERTISEMENT

அதிமுக உட்கட்சித் தோ்தல் தொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் மேல்முறையீடு செய்ய அனுமதிகோரி எடப்பாடி பழனிசாமி சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக உட்கட்சி தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதை எதிா்த்து வழக்குரைஞா் ராம்குமாா், சுரேன் பழனிசாமி ஆகிய இருவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

விசாரணையின்போது, மனுத் தாக்கல் செய்த இருவரும் அதிமுக உறுப்பினா்கள் இல்லை. எனவே, அவா்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து ராம்குமாா், சுரேன் பழனிசாமியின் அதிமுக உறுப்பினா் அட்டையைப் பரிசோதித்து இருவரும் மனுத் தாக்கல் செய்ய நீதிபதி அனுமதி அளித்தாா். இதை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு காலதாமதம் ஆனதால், தனது தரப்பு மனுவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் முன் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு மீது ராம்குமாா், சுரேன் பழனிசாமி 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT