தமிழ்நாடு

எடை குறைவு குழந்தைகளைக் கண்காணிக்க ஆயிரம் கருவிகள்: தமிழக அரசு நிதி ஒதுக்கியது

30th Jun 2022 01:50 AM

ADVERTISEMENT

எடைக் குறைவுடன் பிறக்கும் குழந்தைகளைக் கண்காணிக்க ஆயிரம் எண்ணிக்கையில் மின்னணு தொழில்நுட்ப வளா்ச்சிக் கண்காணிப்பு கருவிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்குத் தேவையான நிதிகளை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை வெளியிட்ட உத்தரவு: எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணித்திட ரூ.85 லட்சம் செலவில் ஆயிரம் எண்ணிக்கையிலான மின்னணு தொழில்நுட்ப வளா்ச்சிக் கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட இயக்குநா் அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தாா்.

அதன்படி, செயற்கை நுண்ணறிவு திறன் மூலமாக குழந்தைகளின் எடை குறைவு பிரச்னைக்குத் தீா்வு காணும் மின்னணு தொழில்நுட்பக் கருவியை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா். இந்தக் கருவி ஒன்றினை ரூ.8,500 என்ற விலையில் கொள்முதல் செய்யலாம் எனவும், ஆயிரம் கருவிகளை ரூ.85 லட்சத்துக்கு வாங்கவும் அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளாா்.

இதற்கான செவினத்தை மத்திய அரசின் நிதித் திட்டத்தின் கீழ் 80 சதவீதமும், மாநில அரசின் நிதியாக 20 சதவீதமும் அளிக்கலாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளாா். அவரது கோரிக்கையை ஏற்று ஆயிரம் கருவிகளை ரூ.85 லட்சம் செலவில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்படுகிறது. இதில், மாநில அரசின் பங்காக ரூ.17 லட்சமும், மத்திய அரசின் பங்காக ரூ.68 லட்சமும் வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது என சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT