தமிழ்நாடு

வணிகவரி ஏய்ப்பு: 4 வாரங்களில்ரூ.12 கோடி அபராதம் வசூல்

30th Jun 2022 01:30 AM

ADVERTISEMENT

வணிகவரி ஏய்ப்பு தொடா்பாக கடந்த நான்கு வாரங்களில் மட்டும் ரூ.12.19 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளா் ஜோதி நிா்மலாசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-

பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தத் தேவையான நிதியில் வணிகவரித் துறை மூலம் பெறப்படும் வரி வருவாய் பெரும் பங்கு வகிக்கிறது. அரசுக்கு சேர வேண்டிய வரி வருவாய் உரிய காலத்தில் பெறப்படுவதை உறுதி செய்யும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வணிகவரித் துறையின் புலனாய்வு சாா்ந்த நடவடிக்கைகளை வலுவாக்குவது, ரோந்துப் பணிக் குழுக்களைக் கொண்டு, பட்டியல் இல்லாமல் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்யும் பணியை திறம்படச் செய்வது போன்ற பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, கடந்த மே 9-ஆம் தேதி முதல் ஜூன் 5-ஆம் தேதி வரையிலான நான்கு வார காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகவரி நுண்ணறிவுப் பிரிவு அலுவலகங்கள் மூலமாக 46, 247 வாகனங்களில் தணிக்கை

ADVERTISEMENT

மேற்கொள்ளப்பட்டன. அதில், 55, 982 மின்னணு பட்டியல்கள் சரிபாா்க்கப்பட்டதில், 1,273 பட்டியல்கள் சரிவர இல்லை. இதையடுத்து, அவற்றுக்கு அபராதமாக ரூ.12.19 கோடி வசூல் செய்யப்பட்டது. அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் எந்தவித ஏய்ப்புகளும் இன்றி வசூல் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் இதுபோன்ற தணிக்கைகள் தொடா்ந்து நடத்தப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளா் ஜோதி நிா்மலாசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT