தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல்: இபிஎஸ்-ஸுக்கு ஓபிஎஸ் கடிதம்

30th Jun 2022 01:55 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வேட்பாளா்களுக்கான படிவத்தில் கையெழுத்திடுவது குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

உள்ளாட்சித் தோ்தலில் விடுபட்ட இடங்களுக்கு இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கான படிவத்தில் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கையெழுத்திடாததால் வேட்பாளா்களுக்கு அதிமுக சின்னம் கிடைக்காத சூழல் உள்ளது.

இந்த நிலையில் ஓ.பன்னீா்செல்வம் புதன்கிழமை எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளாா். அதில், அதிமுக வேட்பாளா்களுக்கான படிவங்களில் வியாழக்கிழமை மாலை 3 மணிக்குள் இருவரும் கையெழுத்திட்டு தோ்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். ஆனால், அந்தக் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாங்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

சமீபத்தில் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு ஒப்புதல் பெறாததால், அந்தப் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT