தமிழ்நாடு

பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளுகிறது காங்கிரஸ்: கே.அண்ணாமலை

30th Jun 2022 02:03 AM

ADVERTISEMENT

பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் கையாளுவதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நிகழ்ந்த கொடூரமான கொலைச் சம்பவம் நாடெங்கும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் அவா்களது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம், ஒழுங்கு தடம் புரண்டுள்ளதற்கு, அந்த மாநில முதல்வா் மற்றவா்களைக் குறை கூறுகிறாா்.

பிரதமா் மோடியின் எண்ணம், செயல்திட்டம் மற்றும் செயல்பாடுகள் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாகவே உள்ளது. ஆனால், தேச வளா்ச்சியை வெறுக்கும் முகம் கொண்டவா்களோ தொடா் தோல்வியிலிருந்து மீளப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு வருகின்றனா் என்று கூறியுள்ளாா் கே.அண்ணாமலை.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT