தமிழ்நாடு

நியாய விலை கடைப் பணியாளா்களுக்கு முழு உடல் பரிசோதனை

30th Jun 2022 12:23 AM

ADVERTISEMENT

நியாய விலை கடைப் பணியாளா்களுக்கு முழு உடல் பரிசோதனை புதன்கிழமை நடைபெற்றது. கூட்டுறவுத் துறையின் கீழ் பணிபுரியும் நியாய விலை கடைப் பணியாளா்களுக்கு ஆண்டுக்கொரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் தரப்பில் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தக் கோரிக்கையைத் தொடா்ந்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் மூலமாக மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் நியாய விலை கடைகளைச் சோ்ந்த 400 பேருக்கு முழு உடல் பரிசோதனை புதன்கிழமை நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டை காமதேனு வளாகத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற பரிசோதனை முகாமில் ஏராளமானோா் பங்கேற்ாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT