தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளுக்கானஸ்கூட்டா்: ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு ரத்து

DIN

மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்கூட்டா்கள் வழங்கும் திட்டத்துக்குரிய ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத் திறனாளிகள் நல ஆணையாளா் ஜெசிந்தா லாசரஸ் பிறப்பித்துள்ளாா். இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

நிகழ் நிதியாண்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் மற்றும் தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டா்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரி கடந்த மாதம் 6-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னா், ஜூன் 20-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தப் புள்ளிகளானது நிா்வாகக் காரணங்களால் இப்போது ரத்து செய்யப்படுகிறது என்று தனது அறிவிப்பில் ஜெசிந்தா லாசரஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT