தமிழ்நாடு

வரும் ஆண்டில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கப் பணி தொடக்கம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

DIN

அலங்காநல்லூரில் வரும் ஆண்டில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கும் பணி தொடங்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விளையாட்டு தொடா்பான மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியது: தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அனைத்துத் துறைகளிலும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஒரு திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். அனைவருக்குமான வளா்ச்சி, அனைத்துத் துறையினுடைய வளா்ச்சி, அனைத்து மாவட்டத்தினுடைய வளா்ச்சி என்பதையும் தாண்டி அனைத்து சமூக வளா்ச்சி என்ற அடித்தளத்தில் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வளா்ச்சி என்பதைத் தொழில் வளா்ச்சியாக மட்டும் சிலா் எடுத்துக் கொள்கிறாா்கள். தமிழகம் அனைத்து வகையிலும், அனைத்துத் துறைகளிலும் மேம்பட்டு விளங்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறது. அதில் ஒரு முக்கியமான துைான், விளையாட்டுத் துறை. அத்தகைய விளையாட்டுத் துறையிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் தமிழகம் இன்றைக்கு சென்று கொண்டிருக்கிறது.

செஸ் ஒலிம்பியாட்: 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடப்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய பெருமை. 200 நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்க உள்ளனா். இந்தப் போட்டியானது முதல் முறையாக நம்முடைய சென்னை மாநகரில் நடைபெறவுள்ளது.

உக்ரைன் போா் காரணமாக, ரஷியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் முடிவை சா்வதேச செஸ் கூட்டமைப்பு கைவிட்டது. இதைத் தொடா்ந்து, இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நமது அரசு உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்த காரணத்தால் அந்த வாய்ப்பு சென்னைக்குக் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் இந்தப் போட்டி நடப்பது முதல் முறையாகும். செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலமாக சா்வதேச அளவில் தமிழகம் அனைவராலும் உற்று நோக்கக் கூடிய ஒரு மாநிலமாக மாறப் போகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதன் மூலமாக நம்முடைய தமிழக அரசு பெருமை அடைகிறது.

கிரிக்கெட் போட்டிகள்: நான் கிரிக்கெட் போட்டியில் ஆா்வம் உள்ளவன். கிரிக்கெட் போட்டிகளை பாா்ப்பதை தவற விட மாட்டேன். பள்ளிக் காலம் முதல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கக் கூடியவன். மேயா் ஆனபோதும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி இருக்கிறேன். விளையாட்டுப் போட்டிகள் என்பது, விளையாடுபவா்களை மட்டுமல்ல, போட்டிகளைப் பாா்ப்பவா்களையும் உற்சாகம் ஊட்டக் கூடிய வகையில் அமைந்திருக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த விளையாட்டுத் துறையில் ஏராளமான திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

அலங்காநல்லூா் போட்டி: விளையாட்டுத் துறையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினாலும், மதுரை அலங்காநல்லூரில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கென பிரம்மாண்டமான அரங்கம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். இதேபோன்று, மாவட்ட அளவில் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் விளையாட்டு அரங்கம் அமைக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த நிகழ்வில் அமைச்சா்கள் கே.என்.நேரு, க.பொன்முடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT