தமிழ்நாடு

தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 70 வயது முதியவர் கைது

DIN


தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 70 வயது முதியவரை, 35 ஆண்டுகளுக்கு முன்பு சிறைக்கு சென்ற ஆவணங்கள் மூலம் காவல்துறையினர் கைது செய்தனர். ஒரே இரவில் நான்கு வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது பேலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, செம்பாலூர், எட்டுபுலிக்காடு, ஆலத்தூர், ஆலடிகுமுளை, வீரக்குறிச்சி, வெட்டிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில், கடந்த நான்கு மாத காலமாக தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக இரவு நேரங்களில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம், அறிவாளை காட்டி தாலிச் செயினை பறித்து செல்வதும், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  இரு சக்கர வாகனங்கள் திருட்டு போவதும்,  கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பதாகவும் காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. 

ஒரே இரவில் நான்கு வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பழனிஆண்டி

இதனையடுத்து  குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவுவிட்டார். 

இதனையடுத்து கடந்த நான்கு மாத காலமாக நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் குறித்து தகவல் சேகரித்த காவல்துறையினர், பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் அடிப்படையாக கொண்டு விசாரணை தொடங்கினர்.  

விசாரணையில் ஓரே நபர் அனைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில், பழைய குற்றவாளிகளின் அடையாளத்தோடு தேடியபோது,  தற்போதுள்ள குற்றவாளியின் புகைப்படம் ஒத்து போனது.  

இதனையடுத்து அந்த குற்றவாளியின் தகவலை சேகரித்த காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில்,  ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள செய்யாமங்கலம் கிராமத்தை சேர்ந்த பழனிஆண்டி (70) என்பது தெரியவந்துள்ளது. 

ஆனால், இவர் தற்போது தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே குலமங்கலத்தில் இருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். 

இந்நிலையில், குற்றவாளியிடம் செல்போன் இல்லாததால், அவரை பிடிப்பதில் காவல்துறையினருக்கு சாவலாக அமைந்தது. 

காவல்துறையினரின் தொடர் தேடுதலுக்கு பிறகு  ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே பழனிஆண்டியை கைது செய்தனர். 

35 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு வழிப்பறி, கொள்ளை வழக்குகளின் கைதாகி சிறைக்கு சென்ற பழனியாண்டி.

கைது செய்யப்பட்ட பழனியாண்டி 35 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு வழிப்பறி, கொள்ளை வழக்குகளின் கைதாகி சிறைக்கு சென்றதும். இவர் மீது திருச்சிற்றம்பலம், திருவோணம், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. 

இதையும் படிக்க |  இடைத்தேர்தல் அலசல்! | 3 மக்களவை, 7 பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்

மேலும், ஒரே நாள் இரவில் சுமார் நான்கு வீடுகளில் அடுதடுத்து கொள்ளையடித்ததும் விசாரணையில் தெரியவந்தது. 

இதனையடுத்து பழனிஆண்டி கொள்ளையடித்த  நகைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT