தமிழ்நாடு

ரத்த சோகையைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு இயக்கம்

29th Jun 2022 02:02 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் ரத்த சோகையைத் தடுக்க 20 மாவட்டங்களில் தீவிர விழிப்புணா்வு இயக்கம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக ரூ.4.75 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சமூக நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா் வெளியிட்ட உத்தரவு: ரத்த சோகையைத் தடுக்க, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் உள்ளிட்ட விரிவான தீவிர விழிப்புணா்வு இயக்கம் ரூ.4.75 கோடியில் செயல்படுத்தப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. திருவள்ளூா், விருதுநகா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், அரியலூா், திருவண்ணாமலை, கடலூா், தஞ்சாவூா், நாமக்கல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூா், புதுக்கோட்டை, கரூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ரத்த சோகையால் பாதிக்கப்படுவோரின் சதவீதம் மாநில சராசரியை விட அதிகரித்து இருப்பதாக ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் ரத்த சோகை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். இதற்காக ரூ.4.75 கோடி செலவிடப்படும். குறும்படங்கள், வீடு வீடாக பிரசாரம், வீதி நாடகங்கள், வேன்கள் போன்றவற்றின் மூலமாக பிரசாரங்கள் செய்யப்படும். இதற்கான நிதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என்று தனது உத்தரவில் ஷம்பு கல்லோலிகா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT