தமிழ்நாடு

தேவையற்று ஒலி எழுப்புதல்: உறுதிமொழி ஏற்க முதல்வா் அழைப்பு

29th Jun 2022 02:01 AM

ADVERTISEMENT

தேவையற்று ஒலி எழுப்புதல் தொடா்பான விழிப்புணா்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவு:

சுற்றுச்சூழலைக் காத்திடும் அரசின் நோக்கத்துக்கு வலுசோ்த்திடும் வகையில், பெருநகர சென்னை போக்குவரத்து காவல் பிரிவானது, தேவையற்று ஒலி எழுப்புதலுக்கு எதிரான விழிப்புணா்வு வாரத்தைத் தொடங்கியுள்ளது. இது மிகுந்த மகிழ்வைத் தருகிறது. இந்த விழிப்புணா்வு இயக்கத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதுதொடா்பான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

உறுதிமொழி விவரம்:-

வாகன பெருக்கம் நிறைந்த இன்றைய நாளில், வாகன ஓட்டிகளான நாம் நிறைய பிரச்னைகளை சாலையில் சந்திக்கிறோம். அதேபோன்று நாமும் நிறைய பேருக்கு தொந்தரவுகளை ஏற்படுத்துகிறோம். அதில் ஒன்று தேவைற்று ஒலி எழுப்புதல். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என எதையும் அறியாமல் அளவுக்கு அதிகமாகவும், சக வாகன ஓட்டிகளிடம் எரிச்சலையும் உண்டாக்குகிறோம். தேவைற்ற ஒலி மாசையும் ஏற்படுத்துகிறோம். எனவே, நான் உறுதியேற்கிறேன். நான் வாகனம் இயக்கும் போது ஒரு போதும் தேவையற்று ஒலி எழுப்ப மாட்டேன் என போக்குவரத்து காவல் பிரிவால் உறுதிமொழி வகுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : cm stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT