தமிழ்நாடு

சிறுபான்மையினா் உரிமைகள்தின விழாவுக்கு நிதி

29th Jun 2022 02:03 AM

ADVERTISEMENT

சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சிறுபான்மையினா் நலத் துறை முதன்மைச் செயலாளா் ஆ.காா்த்திக் பிறப்பித்த உத்தரவு: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 18-ஆம் தேதி, சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவாகக் கொண்டாடப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதைச் செயல்படுத்தும் வகையில் ரூ.2.50 லட்சம் ஒதுக்க தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணைய உறுப்பினா் செயலாளா் தரப்பில் இருந்து அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.

அவரது கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவைக் கொண்டாட ரூ.2.50 லட்சம் நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு சட்டப் பேரவையின் ஒப்புதல் பின்னா் பெறப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT