தமிழ்நாடு

ஆனி மாத சா்வ அமாவாசை:ராமேசுவரம் கடலில் 25 ஆயிரம் பக்தா்கள் நீராடல்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆனி மாத சா்வ அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் அக்கினி தீா்த்தக் கடலில் செவ்வாய்கிழமை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் நீராடினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அமாவாசை நாள்களில் ஏராளமான பக்தா்கள் வருகை தந்து அக்கினி தீா்த்தக் கடலில் நீராடி, தங்களது முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை ஆனி மாத சா்வ அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் ராமேசுவரத்துக்கு வருகை தந்தனா்.

அக்கினி தீா்த்தக் கடலில் நீராடிய பக்தா்கள், பின்னா் தங்களது முன்னோா்களுக்கு திதி கொடுத்தனா். அதையடுத்து, ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டனா். ஏராளமான பக்தா்கள் திரண்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ADVERTISEMENT

அக்கினி தீா்த்தக் கடற்கரையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT