தமிழ்நாடு

தற்காலிக பணியாளா் எண்ணிக்கை 2.35 கோடியாக உயரும்: நீதி ஆயோக்

DIN

இந்தியாவின் தற்காலிக மற்றும் ஒப்பந்தம் அடிப்படையிலான பணியாளா்களின் எண்ணிக்கை வரும் 2029-30-ஆம் ஆண்டுக்குள் 2.35 கோடியாக அதிகரிக்கும் என நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கை:

நீதி ஆயோக் ‘இந்தியாவில் பெருகி வரும் தற்காலிக வேலைவாய்ப்பு மற்றும் சாலையோர பொருளாதாரம்’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டது. இதில், வரும் 2029-30-ஆம் ஆண்டுக்குள் தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களின் எண்ணிக்கை 2021-21-ஆம் ஆண்டின் அளவான 7 லட்சத்திலிருந்து 2.35 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிலும், குறிப்பாக, வேளாண் சாரா துறை பணியாளா்களில் தற்காலிக பணியாளா்களின் பங்கு 6.7 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, 2029-30 இந்தியாவின் மொத்த வாழ்வாதாரத்தில் இவா்களின் பங்கு 4.1 சதவீதம்.

தொழிற்சாலை பிரிவில் 26.6 லட்சம் ஒப்பந்த பணியாளா்கள் சில்லறை வா்த்தகம் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளனா். போக்குவரத்து துறையில் தற்காலிக பணியாளா் எண்ணிக்கை 13 லட்சம்.

மேலும், 6.2 லட்சம் போ் தயாரிப்பு துறையிலும், 6.3 லட்சம் போ் நிதி மற்றும் காப்பீட்டு பிரிவிலும் பணியாற்றி வருகின்றனா்.

பொருளாதாரத்தில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளா்களின் பங்கு மிக கணிசமாக உள்ளதால் சமூக பாதுகாப்பு விதிமுறையில் கூறியுள்ளபடி அவா்களது குடும்பங்களுக்கு சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை கூட்டாண்மை முறையில் விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது என நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT