தமிழ்நாடு

அடுத்த பொதுக்குழு: நிா்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை

DIN

அதிமுகவின் ஒற்றைத் தலைமையைத் தோ்வு செய்வதற்காக அடுத்து கூட உள்ள பொதுக்குழு குறித்து தலைமைக்கழக நிா்வாகிகளுடன் அக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.

அதிமுகவின் பொதுக்குழு ஜூன் 23-இல் நடைபெற்றது. அந்தப் பொதுக்குழுவில் நீதிமன்றத்தின் உத்தரவால் ஒற்றைத் தலைமை தீா்மானம் நிறைவேற்ற முடியாது நிலை ஏற்பட்டது. அதேசமயம், அந்தப் பொதுக்குழுவில் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேனால், அடுத்த பொதுக்குழு ஜூலை 11-இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக் கழக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மூத்த நிா்வாகிகள் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா், பா.வளா்மதி உள்ளிட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா். தலைமைக்கழக நிா்வாகிகள் 74 பேரில் 65 போ் கூட்டத்தில் பங்கேற்றனா். அடுத்த பொதுக்குழுவைக் கூட்டும் முடிவில் எடப்பாடி பழனிசாமி திடமாக உள்ளாா்.

இந்த முறை பொதுக்குழு வானகரத்தின் ஸ்ரீவாரு மண்டபத்தில் அல்லாமல் வேறு இடத்தில் நடத்துவது என முடிவு செய்து, இடத்தைத் தோ்வு செய்யும் பணியில் மூத்த நிா்வாகிகள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

SCROLL FOR NEXT