தமிழ்நாடு

தமிழ்நாடு கரோனா: இன்றும் அதிகரிப்பு!

28th Jun 2022 07:53 PM

ADVERTISEMENT


தமிழ்நாட்டில் புதிதாக 1,484 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 1,479 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க9 மாதங்களுக்குப் பிறகு..: ஒரே மேடையில் தமிழிசை, கேசிஆர்!

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 4 பேர் மற்றும் அசாமிலிருந்து வந்த ஒருவர் என மொத்தம் 1,484 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திங்கள்கிழமை 1,461 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதையும் படிக்க |  சென்னையில் 600க்கும் அதிகமானோருக்கு கரோனா

மேலும் 736 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,71,289 ஆக உயர்ந்துள்ளது. இதில் 34,24,293 பேர் குணமடைந்துள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கை 38,026 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டங்கள்:

  • சென்னை - 632
  • செங்கல்பட்டு - 239
  • கோவை - 70
  • காஞ்சிபுரம் - 59
  • கன்னியாகுமரி - 51

மற்ற மாவட்டங்களில் 50-க்கும் குறைவாகவே கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT