தமிழ்நாடு

இருசக்கர வாகனத்தில் பாம்பு: திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு (விடியோ)

28th Jun 2022 03:23 PM

ADVERTISEMENT

வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தில், நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் தினேஷ்குமார். இவர் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்தபோது வாகனத்தில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் வண்டியை நிறுத்தி பார்த்தபோது, அதில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து  உடனடியாக  திருவிடைமருதூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி இருசக்கர வாகனத்தில் முன்பகுதியில் இருந்த பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால் சில மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் இந்த விடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT