தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு: உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் மனு

28th Jun 2022 08:03 PM

ADVERTISEMENT

 

அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் இடம்பெற்றுள்ள 10க்கும் அதிகமானோர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதில், கட்சி செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்துவது முறையல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

படிக்க தமிழகம், புதுவை அதிமுகவில் விரைவில் ஒற்றைத் தலைமை உருவாகும்

மேலும், பொதுக்குழுவில் கட்சி உறுப்பினர்களின் விருப்பப்படி ஜனநாயக முறைப்படி எடுக்கும் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக் குழு விவகாரம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் நேற்று (ஜூன் 27) கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

படிக்க | 9 மாதங்களுக்குப் பிறகு..: ஒரே மேடையில் தமிழிசை, கேசிஆர்!

அதிமுகவின் பொதுக்குழு ஜூன் 23-இல் நடைபெற்றது. அந்தப் பொதுக்குழுவில் நீதிமன்றத்தின் உத்தரவால் ஒற்றைத் தலைமை தீா்மானம் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அதேசமயம், அந்தப் பொதுக்குழுவில் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேனால், அடுத்த பொதுக்குழு ஜூலை 11-இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT