தமிழ்நாடு

மேலூர் அருகே நீர்வழிப்பாதையை அழித்து, சாலை: கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்

DIN

மேலூர் அருகே நீர்வழிப்பாதையை அழித்து, சாலை அமைப்பதால்  200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, கோட்டாசியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு நடத்த கோரிக்வை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சூரகுண்டு நான்குவழிச்சாலையின் இரு புறமும் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பெரியமேளம் கண்மாய் மூலம் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், இந்த பெரியமேளம் கண்மாயில் இருந்து, சாலையின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன தண்ணீர் செல்லும் வகையில், பொது பணித்துறையினரால் அமைக்கப்பட்ட சிமெண்ட குழாய் மற்றும் கால்வாய் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட நீர்வழிப்பாதையினை, இப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இணைப்பு சாலை பணிக்காக மண்னை போட்டு நான்கு வழிச்சாலையை அமைக்கும் நிர்வாகத்தினர் மூடி விட்டனர்.

இதனால் சாலையின் இருபுறமும் உள்ள சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு பாசன தண்ணீர் செல்லவும், வெளியேறவும் வழியின்றி பாதிப்படைந்து வருவதாக கூறி இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெடுஞ்சாலை அமைக்கும் நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தொடர்ந்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பீர்தௌஸ்பாத்திமா அவர்களிடம் இன்று முறையிட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு  வந்த வருவாய் கோட்டாட்சியர் பீர்தௌஸ்பாத்திமா மற்றும் மேலூர் வட்டாட்சியர் இளமுருகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தனர். 

இதுதொடர்பாக நெடுச்சாலைதுறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் மற்றும் விவசாயிகளுடன் நாளை கோட்டாசியர் அலுவலத்தில் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT