தமிழ்நாடு

சென்னையில் 600க்கும் அதிகமானோருக்கு கரோனா

28th Jun 2022 07:52 PM

ADVERTISEMENT

 

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 600ஐக் கடந்துள்ளது. சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 632 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

 தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பொதுஇடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.

ADVERTISEMENT

எனினும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகிறது. நேற்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 632 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு 230, திருவள்ளூர் 79, கோவை 70, காஞ்சிபுரம் 59, கன்னியாகுமரி 51, திருச்சி 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT