தமிழ்நாடு

மதுரையில் சர்வதேச செஸ் போட்டி: கேள்விக்குறியான கரோனா விதிமுறைகள்!

28th Jun 2022 06:26 PM

ADVERTISEMENT

மதுரையில் துவங்கிய ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் 2-வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டியில் 13 நாடுகளைச் சேர்ந்த 202 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள நிலையில், கரோனா தடுப்பு நடைமுறைகள் கேள்விக்குறியாகியுள்ளது. 

2-வது ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டி மதுரையில் நடைபெற்று வருகிறது. இன்று துவங்கிய இத்தொடர் வரும் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா, ரஷியா, பெலாரஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், வங்கதேசம் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 202 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

உலக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தீபன் சக்கரவர்த்தி, ரஷியாவை சேர்ந்த போரீஸ், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அலெக்சி பெடரோ, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நீலோத் பல்தாஸ் மற்றும் 13 கிராண்ட் மாஸ்டர்ஸ், 13 சர்வதேச மாஸ்டர்ஸ், 2 பெண் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்ட தலைசிறந்த வீரர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

ADVERTISEMENT

10 சுற்றுகளாக நடைபெறும் இந்தத் தொடரில் முன்னிலை பெறும் வீரர்கள் கிராண்ட் மாஸ்டர் மற்றும் சர்வதேச மாஸ்டர் பட்டங்களைப் பெறத் தகுதி பெறுவர். 

இந்நிலையில் சர்வதேச அளவிலான இந்த போட்டியில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, சானிடைசர் போன்ற எவ்வித கரோனா தடுப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படவில்லை என்பது அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வீரர்கள், பயிற்சியாளர்கள் வரக்கூடிய நிலையில் இது போன்ற விதிமீறல்கள் கரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவை நிகழ்ச்சி ஏற்பாட்டாளார்கள் அமல்படுத்தப்படவில்லை. இதனால் கரோனா நோய்த்தொற்றை எப்படித் தடுப்பது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT