தமிழ்நாடு

ஓபிஎஸ் அணியிலிருந்து 9 பேர்.. எடப்பாடி பழனிசாமிக்கு அதிகரிக்கும் ஆதரவு

28th Jun 2022 10:46 AM

ADVERTISEMENT

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வக்குமார் தலைமையில் 9 பேர் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், அவரை இன்று காலை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இதையும் படிக்க.. ரோட்டுக் கடையில் சாப்பிடுகிறவரா நீங்கள்? ஆபத்தை அறிந்துகொள்ள...

பெரம்பலூர்  ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் தலைமையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இன்று அணி மாறி எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவுக்கரத்தை நீட்டியுள்னர்.

ADVERTISEMENT

இதன் மூலம், 2,665 அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில்,   2,432 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT