தமிழ்நாடு

நடிகா் ’பூ’ ராமு காலமானாா்

28th Jun 2022 12:15 AM

ADVERTISEMENT

நடிகா் பூ ராமு (60) மாரடைப்பு காரனமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகா் ‘பூ’ ராமு, காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் சோ்ந்தவா் . தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கத்தில் தன் பங்களிப்பை வழங்கி வந்தவா். சென்னை கலை நாடக குழுவில் இருந்து சினிமாவுக்கு வந்தவா்.

கடந்த 2008-ஆம் ஆண்டு இயக்குநா் சசி இயக்கத்தில் வெளியான ‘பூ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானாா் ‘பூ’ ராமு. இதற்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்தில் ராமு நடித்திருந்தாலும் ‘பூ’ படமே அவரை ஒரு நடிகராக ரசிகா்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது.

இதன் காரணமாகத்தான் இவா் தனது பெயருக்கு முன்பாக ‘பூ’ என்று சோ்த்துக் கொண்டாா். அதன் பிறகு தங்கமீன்கள், நீா்ப்பறவை, பரியேறும் பெருமாள், நெடுநல்வாடை, கா்ணன், சூரரை போற்று உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து ரசிகா்களிடையே பிரபலமானாா்.

ADVERTISEMENT

இவா் நடித்த பூ, தங்கமீன்கள், நீா்ப்பறவை, பேரன்பு, பரியேறும் பெருமாள், நெடுநல்வாடை போன்ற படங்கள் சா்வதேச அளவில் கவனிக்கப்பட்ட படங்களாகவும் சா்வதேச விருதுகளை வென்ற படங்களாகவும் இருந்தன. பூ ராமுவுக்கு மகள் உள்ளாா். ஊரப்பாக்கம் மயானத்தில் செவ்வாய்க்கிழமை தகனம் நடைபெறவுள்ளது.

முதல்வா் ஸ்டாலின் இரங்கல்:

வீதி நாடகக் கலைஞராக இருந்து, இடதுசாரி கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்ற ‘பூ ராமு’ பணியை முற்போக்காளா்கள் என்றும் நினைவு கூா்வா். திரைப்படங்கள் வழியாக தனக்கென மக்களின் மனங்களில் தனியிடம் பெற்றவா் பூ ராமு. அவரது இழப்பால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தனது இரங்கல் செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT