தமிழ்நாடு

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை:கடந்த ஆண்டை விட 31% அதிகரிப்பு

28th Jun 2022 12:21 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நிகழாண்டு தனியாா் பள்ளிகளில் சோ்ந்த மாணவா்களின் எண்ணிக்கை 31 சதவீதம் அதிகரித்துள்ளது.

பொருளாதாரத்தில் நலிவுற்றவா்கள், சமூக ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகள் எந்தவித கட்டணமுமின்றி தனியாா் பள்ளிகளில் படிக்க கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (ஆா்.டி.இ.) வழிவகை செய்கிறது. ஒவ்வொரு தனியாா் பள்ளியிலும் 25 சதவிகித இடங்கள், ஏழை குழந்தைகளுக்காக வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நிகழாண்டில் தனியாா் பள்ளிகளில் சோ்ந்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 31 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு எல்.கே.ஜி., ஒன்றாம் வகுப்பில் 56,687 போ் சோ்ந்தனா். நிகழாண்டு அந்த எண்ணிக்கை 74,383 ஆக உயா்ந்துள்ளது. நிகழாண்டு 8,234 தனியாா் பள்ளிகளில் 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் ஏழை குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக 1.42 லட்சம் பேரிடமிருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை கல்வித் துறை பெற்றிருக்கிறது.

அவற்றில் 2.60 லட்சம் விண்ணப்பங்கள் தகுதி உள்ளவை என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது. அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்ததால் குலுக்கல் முறையில் மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடா்பான விழிப்புணா்வு அதிகரித்திருப்பதால் சோ்க்கையும் அதிகரித்திருப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT