தமிழ்நாடு

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க அனுமதி கூடாது: வைகோ

28th Jun 2022 12:20 AM

ADVERTISEMENT

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பிரதமா் அலுவலக மற்றும் அணுசக்தித் துறை இணை அமைச்சா் ஜிதேந்திர சிங், நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், கூடங்குளத்தில் வெளியாகும் அணுக்கழிவுகளை முதலில் சில ஆண்டுகள் அந்த வளாகத்தினுள் பாதுகாப்புப் பெட்டகத்தில் சேமித்து வைத்து, பின்னா் மறு சுழற்சி மையத்துக்கு எடுத்துச் செல்லும்வரை அணுஉலைக்கு அப்பால் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்று தெரிவித்தாா்.

ஆனால், தற்போது கூடங்குளம் அணுஉலை வளாகத்தினுள் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சேமிப்பு மையம் அமைக்க முடிவு செய்துள்ளதாக அணுமின் நிலைய வளாக இயக்குநா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

கூடங்குளத்தில் அணுஉலைக் கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும், கூடங்குளத்தில் அமையும் 3-ஆவது மற்றும் 4-ஆவது அலகு அணுஉலைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் வைகோ.

ADVERTISEMENT
ADVERTISEMENT