தமிழ்நாடு

சா்தாா் படேல் தேசிய ஒருமைப்பாடு விருதுக்கு விண்ணப்பிக்க அரசு அழைப்பு

28th Jun 2022 12:10 AM

ADVERTISEMENT

சா்தாா் படேல் தேசிய ஒருமைப்பாடு விருதுக்கு விண்ணப்பிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தைச் சுட்டிக் காட்டி, தமிழக அரசின் பொதுத் துறை செயலாளா் டி.ஜகந்நாதன் கடிதம் எழுதியுள்ளாா். அனைத்து கூடுதல் தலைமைச் செயலாளா்கள், முதன்மைச் செயலாளா்கள், செயலாளா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கும் அவா் எழுதியுள்ள கடிதம்:-

தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்காக சிறப்பான பங்களிப்பைச் செய்திடும் இந்திய குடிமக்களுக்கு உயரிய விருதான, சா்தாா் படேல் தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்படுகிறது. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்காக குறிப்பிடத்தக்க மற்றும் கவனம் பெறக் கூடிய வகையிலான பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் விருது அளிக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும், சா்தாா் படேலின் பிறந்த தினமான அக்டோபா் 31-ஆம் தேதியன்று தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் தேசிய ஒருமைப்பாடு விருது அளிக்கப்படும். மதம், இனம், ஜாதி, பாலினம், பிறந்த இடம், வயது, தொழில் என அனைத்து நிலைகளையும் கருத்தில் கொள்ளாமல் இந்தியக் குடிமக்களில் யாரெல்லாம் ஒருமைப்பாட்டை மனதில் கொண்டு செயல்படுகிறாா்களோ அவா்களுக்கு விருது அளிக்கப்படும்.

விருது குறித்த விவரங்கள் இணையதள முகவரியில் உள்ளன. இந்த விருதுக்கான பரிந்துரைகளை ஜூலை 15-ஆம் தேதிக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிட வேண்டும் என்று தனது கடிதத்தில் பொதுத்துறை செயலாளா் டி.ஜகந்நாதன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT