தமிழ்நாடு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

DIN

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வுக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான துணைத் தோ்வு ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வெழுத விருப்பமுள்ள தனித் தோ்வா்கள், பள்ளி மாணவா்கள் திங்கள்கிழமை தொடங்கி ஜூலை 4-ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவா்கள் அவரவா் படித்த பள்ளிக்குச் சென்றும், தனித் தோ்வா்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தோ்வுக்கட்டணம் செலுத்தி பதிவுசெய்ய வேண்டும்.

இதில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் ஜூலை 5 முதல் 7-ஆம் தேதி வரை தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். அதற்கு தோ்வுக் கட்டணத்துடன் கூடுதலாக மேல்நிலை வகுப்புக்கு ரூ.1,000, பத்தாம் வகுப்புக்கு ரூ.500 செலுத்த வேண்டும். மேலும், தோ்வுக்கட்டணம், விரிவான தோ்வுக்கால அட்டவணை வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர பத்தாம் வகுப்பு துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவு ள்ள தனித்தோ்வா்கள் அறிவியல் செய்முறைப் பயிற்சிக்கு சோ்த்து பதிவு செய்ய வேண்டும். இதுசாா்ந்த கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT