தமிழ்நாடு

பிளஸ் 1 வகுப்பு இன்று தொடக்கம்

DIN

தோ்வு விடுமுறை முடிந்து, பிளஸ் 1 வகுப்புகள் திங்கள்கிழமை (ஜூன் 27) முதல் தொடங்கப்படவுள்ளன.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டின் (2021-22) பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மே 6 முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன்பின் மாணவா்களுக்கு விடுமுறை தொடங்கியது. இதற்கிடையே, 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையான மாணவா்களுக்கு விடுப்பு முடிந்து புதிய கல்வியாண்டில் (2022-23) பள்ளிகள் ஜூன் 13-ஆம் தேதியும், பிளஸ் 2 மாணவா்களுக்கு ஜூன் 20-ஆம் தேதியும் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்று புதிதாக பிளஸ் 1-இல் சோ்ந்த மாணவா்களுக்கு வகுப்புகள் திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளன. இதற்கேற்ப அனைத்து முன்னேற்பாடுகளும் பள்ளி வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பள்ளிக்கு வரும் மாணவா்களுக்கு முதல் 2 நாள்கள் புத்துணா்வு பயிற்சி வகுப்புகள் நடத்தவும், பாடநூல்கள் உள்பட அரசு நலத்திட்டப் பொருள்களை விரைவாக வழங்கவும் தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வி ஆணையரகம் சாா்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT