தமிழ்நாடு

பொருளாளராக ஓபிஎஸ் நீடிப்பாரா?: ஜெயக்குமார் பதில்

DIN

அதிமுக பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் நீடிப்பாரா? என்பதற்கு பொதுக்குழுவில் விடை கிடைக்கும் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகாவல் வெளியாகியுள்ளது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று ஆலாசனைக் கூட்டம் நடந்து.

74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் இன்றைய ஆலாசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். 5 பேர் மட்டுமே வரவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானதால் அவைத்தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு அழைப்பிதழ் அனுப்புவது பற்றி ஆலோசித்தோம். பல முடிவுகள் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தை நடத்த தலைமை நிலையச் செயலாளருக்கு உரிமையுண்டு. அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். துரோகம் அவரது உடன்பிறந்த ஒன்று. ஓபிஎஸ்சின் துரோகங்களுக்கு நிறைய உதாரணங்களை கூற முடியும். ஓபிஎஸ் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா நீடிக்க மாட்டாரா என்பதற்கு பொதுக்குழுவில் விடை கிடைக்கும்.

ஆலோசனைக் கூட்டத்தை நடத்த தலைமை நிலையச் செயலாளர் ஈபிஎஸ்சுக்கு உரிமை உண்டு. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் முதல்வரை சந்தித்து அர்ப்பணிப்பு உணர்வுடன் நடந்ததை மறக்க முடியுமா?. உடல்நலக்குறைவால் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டத்தில் பங்கேற்வில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT