தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு பெண் பார்த்து வருகிறோம்: தாயார் அற்புதம்மாள்

27th Jun 2022 03:06 PM

ADVERTISEMENT

பேரறிவாளனுக்கு பெண் பார்த்து வருவதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். 

சென்னை புழல் சிறையில் ராபர்ட் பயாஸை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பேரறிவாளனுக்கு பெண் பார்க்க தொடங்கி உள்ளோம். விரைவில் அறிவிப்பு வரும். ராஜீவ் கொலை வழக்கில் நிச்சயம் மற்றவர்களுக்கும் விடுதலை கிடைக்கும். 2 மாதத்தில் அரசு கவனிக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், நளினி, சாந்தன் ஆகியோா் வேலூா் சிறையிலும், ராபா்ட் பயாஸ், ஜெயக்குமாா் ஆகியோா் புழல் சிறையிலும், ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா்.

இதையும் படிக்க- விசாரணையில் நடந்தவை என்ன? பேரறிவாளன் அதிர்ச்சித் தகவல்கள்

ADVERTISEMENT

இந்த வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஏ.ஜி.பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரது மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT