தமிழ்நாடு

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 90.07% பேர் தேர்ச்சி

DIN

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 90.07% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு கடந்த மே 10 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை 8.3 லட்சம் மாணவா்கள் எழுதினா். இதன் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, தோ்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளன. அதில், 90.07% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

பொதுச்தேர்வு எழுதிய மாணவிகளளில் 94.99% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் 84.86% பேர் தேர்ச்சி பெற்றதாகவும் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 1 தேர்வில் மாணவர்களைவிட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 தேர்வில் 95.56% மாணாக்கர்கள் தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த 2020 மார்ச் பொதுத்தேர்வில் தேர்ச்சி 96.04%ஆக இருந்த நிலையில் இந்தாண்டு 5.97% குறைந்தது. 

மாணவா்கள் தோ்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.deg.tn.gov.in ஆகிய வலைதளங்களில் அறிந்துகொள்ளலாம். இதுதவிர மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன்கூடிய தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

முந்தைய ஆண்டுகளைப் போல மாணவா்களின் கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தோ்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT