தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி தடை: அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை

DIN

சென்னை: ஆன்லைன்  ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து இன்று மாலை அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் ரம்மியால் கடன் தொல்லை, மன உளைச்சல், தற்கொலை சம்பவங்கள் நிகழ்வதையடுத்து தமிழக அரசு குழு அமைத்துள்ளது.

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது பற்றிய பரிந்துரைகளை முதல்வர் ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு இன்று அளித்துள்ளது. 

ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தில் இடம்பெற வேண்டியவற்றை பரிந்துரைகளாக வல்லுனர் குழு அளித்தது. அவசர சட்டம் பற்றி மாலை அமைச்சரவை ஆலோசிக்க உள்ள நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக அவசர சட்டத்தை வகுக்கத் தேவையான பரிந்துரைகளை வல்லுனர் குழு அளித்துள்ளது. இதையடுத்து குழுவின் பரிந்துரை அறிக்கையை ஆய்வு செய்து விரைவில் அவசர சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது. 

ஆன்லைன் ரம்மி தொடர்பாக நீதிபதி சந்துரு குழு அளித்த பரிந்துரைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT