தமிழ்நாடு

மணப்பாறை நகராட்சி நகர்மன்ற தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் அதிமுக கவுன்சிலர்!

27th Jun 2022 03:33 PM

ADVERTISEMENT

 

மணப்பாறை நகராட்சி நகர்மன்ற தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் அதிமுக கவுன்சிலர் பா.சுதா. 

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்கு நடந்து முடிந்த நகர்மன்ற தலைவர் தேர்தலில் 11 வார்டு உறுப்பினர்களை மட்டுமே வைத்துள்ள அதிமுக 15 வாக்குகள் பெற்று நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றியது. 

இதில், 18-ஆவது வார்டு அதிமுக உறுப்பினரான பா.சுதா வெற்றி பெற்று நகர்மன்ற தலைவரானார். இது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஜெர்மனியில் மோடி பேசிய சில தகவல்களின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும்: ப.சிதம்பரம்

அதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த திமுவினவர் துணைத்தலைவர், குழு உறுப்பினர்கள் தேர்தல்களை புறக்கணித்ததால், எந்த தேர்தலும் நடைபெறாத நிலையில், நகர்மன்ற கூட்டமும் நடைபெறவில்லை. 

கடந்த 3 மாதங்களாக இந்நிலை நீடித்து வந்த நிலையில், திங்கள்கிழமை தனது நகர்மன்ற தலைவர் பதவியை பா.சுதா திடீரென ராஜிநாமா செய்துள்ளார். 

இதற்கான கடிதத்தை நகராட்சி ஆணையர் சி.என்.சியாமளாவிடம் தற்போது அளித்தார். கடிதத்தை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர், பா.சுதாவின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... உச்ச நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! 

சொந்த காரணங்களுக்காக தனது நகர்மன்ற தலைவர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக பா.சுதா கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT