தமிழ்நாடு

சாகித்திய அகாதெமி விருது: எழுத்தாளர் மாலனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

26th Jun 2022 04:56 PM

ADVERTISEMENT

சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ள மூத்த எழுத்தாளர் மாலனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். 
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள ஊடகவியலாளர் நாராயணன் (எ) மாலனுக்கு வாழ்த்துகள்!
அறிவார்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க- சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகள்: தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு

சாகித்திய அகாதெமி சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த மொழியாக்கப் படைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு சாகித்திய அகாதெமி மொழிபெயா்ப்புக்கான விருதுக்கு எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான மாலன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். 
சைரஸ் மிஸ்திரி எழுதிய ஆங்கில நாவலான ‘க்ரோனிக்கல் ஆஃப் காா்ப்ஸ் பியரா்’ நூலை ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் மாலன் தமிழில் மொழிபெயா்த்தமைக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT