தமிழ்நாடு

அதிமுகவில் புதிய சர்ச்சை... உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்பாளர்களின் படிவத்தில் கையெழுத்திடுவது யார்? 

DIN

தமிழகத்தில் 34 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்? என்ற புதிய சர்ச்சை அதிமுகவில் எழுந்துள்ளது. 

தமிழகத்தில் பல்வேறு காரணங்களுக்காக காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள  இரண்டு மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட  510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 

இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை திங்கள்கிழமை (ஜூன்27) கடைசி நாள் ஆகும். 

இதன்படி திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.  

தேர்தல் நடைபெற உள்ள 510 பதவிகளில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும்  மாநகராட்சி கவுன்சிலர்  உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. 

இதில், தஞ்சாவூர் மாநகராட்சி, காஞ்சிபுரம் மாநகராட்சி, பெரியகுளம் நகராட்சி, மயிலாடுதுறை நகராட்சி, ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேருராட்சி, அத்தாணி பேருராட்சி, இளையான்குடி பேருராட்சி, கனாடுகாத்தான் பேரூராட்சி, அய்யம் பேட்டை பேரூராட்சி, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி, வயபுதுப்பட்டி பேரூராட்சி, நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேரூராட்சி, கடலூர் மாவட்டம் , புதுக்கோட்டை 26, 7 வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் சம்பந்தபட்ட கட்சி தலைவர்கள் கையெழுத்திட வேண்டும். 

அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் இந்த படிவங்களில் கையெழுத்திட்டு  வந்தனர். 

இந்நிலையில், அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சி சர்ச்சையால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே செல்லாது என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளதால் இந்த படிவங்களில் யார் கையெழுத்து இடுவார்கள் என்ற புதிய சர்ச்சை அதிமுகவில் எழுந்துள்ளது. 

அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வரும் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான 30 ஆம் தேதி மாலை 3 மணிக்குள்  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்தைப் பெற்று வேட்புமனுக்களை சமர்பிக்க வேண்டும். 

இதன்படி அதிமுக வேட்பாளர்கள் வரும் 30 ஆம் தேதி மாலைக்குள் இந்த படிவத்தை சமர்பிப்பார்களா?, அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கலும் எழுந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT