தமிழ்நாடு

பருவமழை முன்னெச்சரிக்கை: சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

DIN

பருவழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சியில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

பொதுவாகவே பருவமழைக் காலத்தில் தலைநகர் சென்னையில் அதிக மழை பெய்யும்போதெல்லாம் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளிக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய வெள்ளத்தை சென்னை எதிர்கொண்டது. பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதோடு, புறநகர் பகுதிகளில் பல இடங்களில் வெள்ளநீரில் தத்தளித்தது. 

இதையும் படிக்க | 

இதனால், இந்த ஆண்டு பருவ மழையால் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்ள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சியில் மழை வெள்ள பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து, தடுப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 

மேலும், வெள்ளநீரை அகற்ற மோட்டார் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சீரான போக்குவரத்தை உறுதி செய்தல் போன்ற பணிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளையும் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT