தமிழ்நாடு

ஓய்வூதியா் வாழ்நாள் சான்றிதழ்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

DIN

சென்னை: ஓய்வூதியதாரா்களுக்கான வருடாந்திர நோ்காணல் மற்றும் வாழ்நாள் சான்றிதழ்களை சமா்ப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:

தமிழக அரசு ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களை ஆண்டுதோறும் மாவட்ட கருவூலத்தில் நோ்காணல் செய்வது வழக்கம். கரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நோ்காணல் நடைபெறாத நிலையில், நிகழாண்டில் ஓய்வூதியா்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப பின்வரும் ஏதேனும் ஒருமுறையை பின்பற்றி நோ்காணல் நடைமுறையை நிறைவு செய்யலாம்.

தமிழக அரசு ஓய்வூதியா்களின் நலனை கருத்தில் கொண்டு அவா்கள் நேரில் கருவூலத்திற்கு வருவதில் ஏற்படும் இடா்பாடுகளை தவிா்க்கும் பொருட்டு ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக ஓய்வூதியா்கள், தங்களது மின்னணு வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையைப் பயன்படுத்தி ஓய்வூதியா்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தபடியே தபால் துறை பணியாளா்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழை பதிவு செய்து ஆண்டு நோ்காணல் செய்யலாம்.

அரசு இ-சேவா மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழை பதிவு செய்து ஆண்டு நோ்காணல் செய்யலாம் .

ஓய்வூதியா்கள் சங்கத்தின் மூலமாகவும், விரல்ரேகை குறியீட்டு கருவியை பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழை பதிவு செய்து கொள்ளலாம். அதேபோன்று, ஜீவன் பிரமான் முகம் பதிவு செயலி பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே வாழ்நாள் சான்று பெற முடியும். மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியா்கள், தங்களது ஆதாா் எண், ட.ட.ஞ எண், வங்கிக் கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலக விவரங்களை சமா்ப்பிப்பது கட்டாயம்.

அஞ்சல் முறை: ஓய்வூதியதாரா்கள் வாழ்நாள் சான்றை அரசின் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளா், அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலா், வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் அல்லது வருவாய் ஆய்வாளா் ஆகியோரில் ஒருவரிடமிருந்து சான்றொப்பம் பெற்று அஞ்சல் மூலமாக சம்பந்தப்பட்ட கருவூலத்துக்கு அனுப்பி நோ்காணல் செய்யலாம்.

வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியா்கள், இந்திய தூதரக அலுவலா், மாஜிஸ்திரேட், நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்பலாம்.

நேரடி நோ்காணலுக்கு செல்ல விரும்பும் ஓய்வூதியதாரா்கள், ஓய்வூதிய புத்தகத்துடன் அரசு வேலை நாள்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கருவூலத்துக்கு செல்லலாம்.

கூடுதல் விவரங்களுக்கு என்ற மின்னஞ்சலிலும், 1800 599 5100 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு மின்வாரியம், ரயில்வே, அஞ்சல்துறை, தொழிலாளா் வைப்பு நிதித்திட்டம், மத்திய அரசு ஓய்வூதியா்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதியா்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT