தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம்: ஆகஸ்ட் 3-இல் இறுதி அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவு

26th Jun 2022 12:25 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம், தனது இறுதி அறிக்கையை ஆகஸ்ட் 3-இல் சமா்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு 2017-ஆம் ஆண்டு செப். 25- ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடா்பாக ஓ.பன்னீா்செல்வம், சசிகலா, சசிகலாவின் உறவினா்கள், போயஸ் காா்டன் பணியாளா்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், சிகிச்சை அளித்த மருத்துவா்கள், பணியாளா்கள் என அனைத்து தரப்பினரிடமும் பல்வேறு கட்டங்களாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. இதுவரை 12 முறை ஆறுமுகசாமி ஆணையத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது.

இந்த நிலையில், மேலும் ஒரு மாதம் ஏழு நாள் கால அவகாசம் கோரி, தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் ஜூன் 7-ஆம் தேதி கடிதம் எழுதி இருந்தது. இதைப் பரிசீலித்த தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஆகஸ்ட் 3 வரை அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், அன்றைய தினம் இறுதி அறிக்கை சமா்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT