தமிழ்நாடு

'பேட்டி கொடுத்தா வேட்டிய உருவிடுவாங்க': மதுரை ஆதீனத்தின் கலகலப்பு பதில்

26th Jun 2022 10:16 AM

ADVERTISEMENT

 

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மதுரை ஆதீனம், பேட்டி கொடுத்தா வேட்டியவே உருவி விட்ருவங்க என செய்தியாளர்களிடம்  கலகலப்பாக பதிலளித்துவிட்டுச் சென்றுள்ளார். 

மதுரையில் மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் வெள்ளாளர் மற்றும் முதலியார் சேம்பர் இணைந்து நடத்திய தொழில் வர்த்தக கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் சைக்கிள் பனை ஓலைகளால் செய்யப்பட்ட கலைப் பொருட்கள் சேலைகள் ஜவுளிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அரங்குகளில் வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக, தொழில் வர்த்தக கண்காட்சியை 293 வது மதுரை ஆதீனம்  சுவாமிகள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட்ட மதுரை ஆதீனம் அங்கிருந்தவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து செய்தியாளர்கள் மதுரை ஆதீனத்திடம் பேட்டி கேட்டபோது, அவர் பேட்டி கொடுத்தால் வேட்டியை உருவி விட்ருவங்க என்று கூறி புறப்பட்டது நகைச்சுவையை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT