தமிழ்நாடு

புதுச்சேரியில் மேலும் 42 பேருக்கு கரோனா

26th Jun 2022 04:11 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் மாநிலத்தில் புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

புதுச்சேரி மாநிலத்தில் 1,271 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 33 பேர், காரைக்காலில் வரிச்சிக்குடி, கோயில்பத்து, காரைக்கால் நகர் தலா ஒருவர் என 3 பேருக்கும், ஏனாமில் 5 பேருக்கும், மாஹேவில் ஒருவா் என 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,66,305 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்: ப.சிதம்பரம்

இதில், 4 போ் மருத்துவமனைகளிலும், 234 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 20 பேர் குணடைந்துள்ளனர். 

மாநிலத்தில் இரு தவணை, முன்னெச்சரிக்கை தடுப்பூசி எடுத்தவர்கள் என 17,39,664 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT