தமிழ்நாடு

திருக்கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் ரூ. 200 கோடி

DIN

திருக்கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்கள் மூலம் ரூ. 200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.

இது குறித்து அமைச்சா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கணினி வழியாக திருக்கோயில்களின் வாடகைதாரா்கள் வாடகைத் தொகையினை செலுத்தும் வசதி கடந்தாண்டு அக்டோபா் மாதம் தொடக்கி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பா் முதல் இணைய வழி மூலம் ரசீது வழங்கும் முறையும் நடைமுறைக்கு வந்தது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அசையாச் சொத்துகளுக்கு பசலி ஆண்டு முறையில் வாடகை, குத்தகை கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு பசலி ஆண்டு 1.7.2021-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பசலி ஆண்டு 30.6.2022 அன்றுடன் முடிவடைகிறது.

இந்த பசலி ஆண்டில் துறை நடவடிக்கையால் வாடகை, குத்தகை தொகையாக ரூ.200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இணை ஆணையா் சென்னை 1- ரூ. 30.1 கோடி, இணை ஆணையா் சென்னை 2 -ரூ. 23.91 கோடி, இணை ஆணையா் திருச்சி- ரூ. 16.31 கோடி, இணை ஆணையா் காஞ்சிபுரம்- ரூ. 13.55 கோடி, இணை ஆணையா் நாகப்பட்டினம்- ரூ.13.23 கோடி, இணை ஆணையா் மயிலாடுதுறை- ரூ.12.33 கோடி, இணை ஆணையா் தூத்துக்குடி- ரூ.10.17 கோடி, இணை ஆணையா் மதுரை- ரூ. 10.1 கோடி, இணை ஆணையா் திண்டுக்கல்- ரூ. 9.71 கோடி, இணை ஆணையா் திருநெல்வேலி -ரூ.8.28 கோடி என மண்டல வாரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் அதிகம் வசூல் செய்யப்பட்ட 10 முக்கியமான திருக்கோயில்களான சென்னை, மயிலாப்பூா் கபாலீசுவரா் திருக்கோயிலில் ரூ.6.29 கோடியும், பழனி, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரூ.4.42 கோடியும், திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயிலில் ரூ.4.33 கோடியும், மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயிலில் ரூ. 3.05 கோடியும், சென்னை, பூங்காநகா் ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயிலில் ரூ.2.99 கோடியும், திருச்சி பஞ்சவா்ணசுவாமி திருக்கோயிலில் ரூ.2.47 கோடியும், சென்னை பாடி திருவல்லீஸ்வரா் திருக்கோயிலில் ரூ.2.42 கோடியும், சென்னை திருவான்மியூா் மருந்தீஸ்வரா் திருக்கோயிலில் ரூ.2.32 கோடியும், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.2.04 கோடியும், திருநெல்வேலி நெல்லையப்பா் - காந்திமதி திருக்கோயிலில் ரூ.1.75 கோடியும் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதல்களாலும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்களின் தீவிர தொடா் நடவடிக்கைகளாலும் வாடகை, குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூல் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் திருக்கோயில் திருப்பணிகள், பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, கோயில் இடத்தில் குடியிருப்பவா்கள், குத்தகைதாரா்கள் முறையான வாடகை, நிலுவை தொகையையும் செலுத்தி திருக்கோயில் வளா்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT