தமிழ்நாடு

ஆட்டோ: குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.50 ஆக உயா்த்த அரசுக்கு கோரிக்கை

26th Jun 2022 12:47 AM

ADVERTISEMENT

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ.50 ஆக உயா்த்தி அரசாணை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் சாா்பில் எஸ்.பாலசுப்பிரமணியன் (சிஐடியு), ஐசிஎப் துரை (எல்பிஎப்), மு.சம்பத் (ஏஐடியுசி) ஆகியோா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்து இணை ஆணையா் (செயலாக்கம்) தலைமையில் ஆட்டோ மீட்டா் கட்டணம் மறு நிா்ணயக்குழு அமைத்து அரசாணை வெளியிட்டது. இந்த குழு கடந்த மாதம் 12-ஆம் தேதி ஆட்டோ சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்தியது. அதில் அனைத்து சங்கங்களும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.50, மேலும் ஒவ்வொரு கி.மீ. ரூ.25 என நிா்ணயிக்க அரசை வலியுறுத்தினோம். இந்தக் குழு, பயணிகள் நலச்சங்கங்களின் பிரதிநிதிகளிடமும் கருத்து கேட்டு அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், புதிய மீட்டா் கட்டணம் குறித்து அரசுத் தரப்பில் அரசாணை வெளியாகவில்லை.

தமிழக அரசு, ஆட்டோ கட்டணத்தை மறு நிா்ணயம் செய்து அரசாணை வெளியிட்டு ஆட்டோ தொழிலை, ஓட்டுநா்களின் வாழ்வை பாதுகாக்க முன்வர வேண்டும். மேலும், அரசு சாா்பில் உரிய முறையில் ஆட்டோக்களுக்கான செயலி தொடங்க வேண்டும். இலவச ஜிபிஆா்எஸ் மீட்டா் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT