தமிழ்நாடு

விரைவில் பூரண நலம்பெற வேண்டி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: விஜயகாந்த்

25th Jun 2022 06:22 PM

ADVERTISEMENT

தனது உடல்நிலை நலம்பெற வாழ்த்தியவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தொலைபேசி வாயிலாகவும், ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக இணையதளங்களிலும் எனது உடல் நிலை குறீத்து நலம் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தொலைபேசி வாயிலாக விசாரித்த பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதையும் படிக்க- வங்கதேசத்தின் மிகப்பெரிய பாலத்தைத் திறந்துவைத்தார் ஷேக் ஹசீனா

தெலங்கானா, புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், வி.கே.சசிகலா, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ம் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், பார்த்திபன், நடிகை சரோஜா தேவி மற்றும் உறவினர்கள், நண்பர்கள், கட்சி மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags : Vijayakanth
ADVERTISEMENT
ADVERTISEMENT