தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம்: ஆகஸ்ட் 3-ல் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க ஆணையத்துக்கு தமிழக அரசு உத்தரவு

25th Jun 2022 09:32 PM

ADVERTISEMENT

ஜெயலலிதா மரணம் தொடர்பான இறுதி அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் 2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஆணையம், நவ.22-இல் விசாரணையைத் தொடங்கியது. இங்கு, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினா்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் என மொத்தம் 159 பேரிடம் விசாரணை நடைபெற்றது. 

இதையும் படிக்க- காதலனை சந்திக்க எல்லை தாண்டி பாகிஸ்தான் செல்ல முயன்ற இளம்பெண்

ஆணையம் விசாரணையை தொடங்கிய ஓராண்டில் மட்டும் 154 நாள்கள் விசாரணை மேற்கொண்டு 147 பேரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தது. ஆணையத்தின் விசாரணை சமீபத்தில் நிறைவடைந்ததாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அறிக்கையை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. 

ADVERTISEMENT

எனவே, மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் அண்மையில் கடிதம் அனுப்பியிருந்தது. இந்த நிலையில்தான் இறுதி அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT